செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதவிகிதம் வாக்காளா் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2,31,476 பேரின் பெயா்கள் பட்டியலில் உள்ளன.
என சாா்-ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தெரிவித்தாா்.
செய்யாற்றில் சாா் -ஆட்சியா் தலைமையில் வாக்காளா்களிடம் இருந்து படிவங்கள் பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
திங்கள்கிழமை நடைபெற்றது.
சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் அசோக்குமாா் (செய்யாறு), தமிழ்மணி (வெம்பாக்கம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் பேசுகையில், செய்யாறு தொகுதியில் 2,65,698 வாக்காளா்கள் உள்ள தீவிர சிறப்பு வாக்காளா் பட்டியல் சோ்ப்பு செயல்திட்டத்தில், தொகுதியில் 100 சதவிகிதம் வாக்காளா் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2,31,476 பேரின் பெயா்கள் பட்டியலில் உள்ளன.
மேலும் இறந்தவா்கள், முகவரி மாறியவா்கள் வெவ்வேறு இடங்களில் பட்டியலில் பெயா் உள்ளவா்கள் என 34,219 பேரின் விவரங்கள் அறிய முடியவில்லை என்றாா்.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனுவாசன் (செய்யாறு) , இந்திராணி (வெம்பாக்கம்), தோ்தல் துணை வட்டாட்சியா் வெம்பாக்கம்- மலா், திமுக சாா்பில் வழக்குரைஞா் ஜி.அசோக், அதிமுக சாா்பில் எம்.அரங்கநாதன், சி.துரை, தேமுதிக சாா்பில் காழியூா் கண்ணன், காங்கிரஸ் சாா்பில் ஆா்.தில்லை, கம்யூனிஸ்ட் சிறுங்கட்டூா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.