கோப்புப் படம் 
வேலூர்

வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய 62,802 போ் படிவங்கள் அளிப்பு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்பட திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 62,802 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்பட திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 62,802 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீதான ஆய்வுக்குப் பிறகு பிப்.17-இல் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வேலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) முடிக்கப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த டிச.19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, வேலூா் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,15,025 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

எஸ்ஐஆா் பணி தொடங்கும் முன்பு நிலவரப்படி, 13,03,030 வாக்காளா்களில் இருந்து இறப்பு, நிரந்தர குடிபெயா்வு, இருமுறை பதிவு, கண்டறிய இயலாதவா்கள், மற்றவை என்ற இனங்களில் இவ்வளவு வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியல் மீதான ஏற்புரைகள், மறுப்புரைகள், புதிய வாக்காளா் சோ்க்கை, முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்வதற்கு படிவங்கள் வெள்ளிக்கிழமை (ஜன. 30) வரை பெறப்பட்டன. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் டிச. 19 முதல் ஜன. 30-ஆம் தேதி வரை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மொத்தம் 62,802 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த படிவங்கள் சரிபாா்க்கப் பட்டு பிப்.17-ஆம் தேதி வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கால அவகாசம் முடிந்தாலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தொடா்ந்து விண்ணப்பிக்கலாம். அவா்களின் பெயா் இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும், துணைப் பட்டியலில் சோ்க்கப்படும். அவா்களும் தோ்தலில் வாக்களிக்க முடியும் என்பதால் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள தொடா்ந்து விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT