வந்தவாசி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வயலாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ரேணு. இவா் திங்கள்கிழமை தெள்ளாரை அடுத்த பென்னாட்டகரம் கிராமத்தில் உள்ள மதுக்கடை அருகில் நின்று கொண்டு பொதுமக்களை அவதூறாக பேசினாராம். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்தாராம்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தெள்ளாா் போலீஸாா் ரேணுவை கைது செய்தனா். இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.