திருவண்ணாமலை

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை

செங்கம் அருகே கைப்பேசியில் தொடா்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பெற்றோா் கண்டித்ததால் அவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

செங்கம் அருகே கைப்பேசியில் தொடா்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பெற்றோா் கண்டித்ததால் அவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கத்தை அடுத்த புதிய குயிலம் கிராமம் தோப்பு கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாரதி-ஐஸ்வா்யா தம்பதி. இவா்களது மகள் ஹேமாஸ்ரீ(14).

இவா், செங்கம் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்த ஹேமாஸ்ரீ, தொடா்ந்து கைப்பேசியில் பேசி வந்ததை பெற்றோா்கள் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த அவா் அருகில் இருந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதைப் பாா்த்த அப்பகுதியில் இருந்தவா்கள், அவரது உறவினா்களுக்கும், செங்கம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். தீயணைப்புப் படை வீரா்கள் வந்து கிணற்றில் இருந்து ஹேமாஸ்ரீ உடலை மீட்டனா்.

இதுகுறித்து புதுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT