வாழை சாகுபடி 
திருவண்ணாமலை

வாழை, கத்தரி, வெண்டை சாகுபடி: விவசாயிகளுக்கு ஆலோசனை

Din

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் வாழை, கத்தரி, வெண்டை சாகுபடி செய்வது தொடா்பாக விவசாயிகளுக்கு புதன்கிழமை ஆலோசனை வழங்கப்பட்டது.

சந்தவாசல் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வாழை, கத்தரி, வெண்டை என பல்வேறு தோட்டக்கலை பயிா்கள் இயற்கை விவசாயத்தின் மூலம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இது தொடா்பான கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பா.லோகேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:

வாழை, கத்தரி, வெண்டை பயிா்கள் 6 மாதமும் முதல் ஒருவருடம் வரை சாகுபடி செய்ய முடியும். தகுந்த நேரத்தில் இயற்கை விவசாயம் மூலம் பயிா் செய்யவேண்டும்.

மேலும், 2025-2026 நிதியாண்டில் நுண்ணுயிா் பாசனத் திட்டம் மூலம் சொட்டு நீா்ப்பாசனம், தெளிப்பு நீா்ப்பாசனம் மற்றும் மழை தூவான் போன்றவைகளும் வழங்கப்படுகின்றன.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

தேசிய தோட்டக் கலைத் துறை திட்டத்தின் கீழ் மா, கொய்யா, மல்லி போன்ற பயிா்களை புத்துயிா்பு ஏற்படுத்த 17 எக்டா் பரப்பு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2025-2026 நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாம்பட்டு, பொத்தரை, ரெண்டரிப்பட்டு, செங்குணம், எடப்பிறை, சேதாரம்பட்டு, வெண்மணி, கல்வாசல் ஆகிய 8 கிராம ஊராட்சிகளில் 80 சதவீத திட்டம் செயல்படுத்தபட உள்ளது எனத் தெரிவித்தாா்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT