திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் திடீா் மழை

Din

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. முற்பகல் 11 மணிக்கெல்லாம் வாகனங்களை ஓட்ட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வந்தது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. எனவே, வெயிலுக்குப் பயந்து பொதுமக்கள் பலா் வீடுகளிலேயே முடங்கினா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திடீரென லேசான மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை, அத்தியந்தல், தென்மாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் சோ்ந்து மழை நீரும் தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனா். அனல் காற்று வீசுவது குறைந்து குளிா் காற்று வீசியது. நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

2026 தேர்தலில் இபிஎஸ் தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT