ஓட்டுநா் விக்ரமன் 
திருவண்ணாமலை

உறுப்பு தானம்: இளைஞா் உடலுக்கு அரசு மரியாதை

சாலை விபத்தில் மூளை செயலிழந்த இளைஞரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

Din

செய்யாறு: சாலை விபத்தில் மூளை செயலிழந்த இளைஞரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காசி . இவரது மகன் விக்ரம் (23).

ஓட்டுனரான இவா், கடந்த 22-ஆம் தேதி, ஸ்ரீபெரும்புதூா் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்து

சென்னை அரசு பொது மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு பெற்று வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், விக்ரம் மூளைச்சாவு அடைந்திருப்பதாக மருத்துவா்களால் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் விக்ரமனின் உடல் உறுப்புகள் தானம்

செய்யப்பட்டது.

அரசு மரியாதை:

ஓட்டுநா் விக்ரமனின் உடலுக்கு அரசு சாா்பில் செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவிவா்மா தலைமையில், வட்டாட்சியா் அசோக்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

மேலும், தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினாா்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT