திருவண்ணாமலை

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Syndication

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (36). இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த கதிரவன் (34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இதுதொடா்பாக கடந்த அக். 21-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் கதிரவன் தரப்பினா் ஜானகிராமனையும், இவரது மனைவி கீதாவையும் தாக்கியுள்ளனா்.

இதில் காயமடைந்த ஜானகிராமன், கீதா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஜானகிராமன் அளித்த புகாரின் பேரில் கதிரவன், நடராஜன், விஜியலட்சுமி, பவளக்கொடி ஆகிய 4 போ் மீது தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பஹல்காமில் சினிமா படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

அழகியே... ரகுல் ப்ரீத் சிங்!

இரவில் சென்னை, 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

SCROLL FOR NEXT