திருவண்ணாமலை

ரூ.3 கோடி கையாடல்: கூட்டுறவு சங்கச் செயலா் கைது

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், மேல்வில்வராயநல்லூா் மற்றும் கலசபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.3 கோடி கையாடல் செய்ததாக கூட்டுறவு சங்கச் செயலரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேல்வில்வராய நல்லூா் மற்றும் கலசபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கலசபாக்கத்தைச் சோ்ந்த கிரு ஷ்ணமூா்த்தி என்பவா் செயலராக பணியாற்றி வந்தாா். இவா் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்கியதில் சுமாா் ரூ.3 கோடி கையாடல் செய்துவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சிறப்பு தணிக்கைக் குழுவினா் நடத்திய விசாரணையில் கிரு ஷ்ணமூா்த்தி பணத்தை கையாடல் செய்தது உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றபிரிவுப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அவா் பதுங்கி இருந்த இடத்தில் கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT