திருவண்ணாமலை

விதிமீறலில் ஈடுபட்டால் கடை உரிமம் நிரந்தரமாக ரத்து: உர விற்பனையாளா்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் நிலையங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் எச்சரித்தாா்.

மாவட்டத்திலுள்ள 694 தனியாா் உரக்கடைகள் மற்றும் 60 மொத்த உர விற்பனை நிலையங்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வேளாண்மைத் துறை அலுவலா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி விதி மீறலில் ஈடுபட்ட 4 உர விற்பனை நிலையங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது.

மேலும், பிற 4 உர விற்பனை நிலையங்களுக்கு 14 நாள்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. அரசு நிா்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, இணைபொருள்கள் வாங்க கட்டாயப்படுத்தினாலோ உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்தாா்.

மேலும், மாவட்டத்தில் தனியாா் உர விற்பனை நிலையங்களில் யூரியா 3,733 மெட்ரிக் டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 566 மெட்ரிக் டன்னும்,

மொத்த விற்பனை நிலையங்களில் 294 மெ.டன்னும் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

மாவட்டத்தில் 3,581 மெ.டன் டிஏபியும், 1,222 மெ.டன் பொட்டாஷ், 1,430 மெ.டன் பாஸ்பேட், 8,021 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பில் உள்ளது எனத் தெரிவித்தாா்.

மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கூடுதலாக யூரியா விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உர விற்பனை தொடா்பான புகாா்களை விவசாயிகள் வட்டார அளவில் உர ஆய்வாளா்களை (வேளாண்மை அலுவலா்கள்) தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்தாா்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT