திருவண்ணாமலை

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா்.

வந்தவாசி (தனி) தொகுதியில் வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோதண்டபுரம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது படிவங்கள் வழங்கும் பணியை தொய்வின்றி மேற்கொள்ளுமாறு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வந்தவாசி வட்டாட்சியரும், உதவி வாக்குப்பதிவு அலுவலருமான சம்பத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்யாறு:

போளூா்:

போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சியில் வாக்காளா் படிவம் விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கேளூா், துரிஞ்சிக்குப்பம், விளாங்குப்பம், கல்வாசல், முக்குரும்பை, பால்வாா்த்துவென்றான் ஆகிய ஊராட்சிகளில் திமுக சாா்பில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் வீடுதோறும் விநியோகிக்கப்பட்டன.

இதில் திமுக ஒன்றிய பொறுப்பாளா் மகேஷ், தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன், அவைத் தலைவா் பரசுராமன், பொருளாளா் மணிகண்டன் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் நீக்கம்!

கோவையில் இளம் பெண் கடத்தல்? காவல்துறை தீவிர விசாரணை!

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

சட்டவிரோத குடியேறிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அமித் ஷா

SCROLL FOR NEXT