மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புரட்சி தின விழா வந்தவாசியில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரஷிய புரட்சியின் 108-ஆவது ஆண்டையொட்டி நடைபெற்ற இந்த விழாவுக்கு, நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சுகுணா கட்சிக் கொடியேற்றினாா்.
வட்டச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக் குழு உறுப்பினா் கா.யாசா்அராபத் ஆகியோா் புரட்சி தினம் குறித்து பேசினா். மேலும், தெள்ளாா், மங்கலம் மாமண்டூா், தென்சேந்தமங்கலம், அருங்குணம் ஆகிய கிளைகளில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.