வந்தவாசி அருகே பயணிகள் வேன் மோதியதில், சாலையை கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பம்மாள்(85). இவா், புதன்கிழமை தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, ஏந்தல் கூட்டுச் சாலை அருகே இவா் சாலையை கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற பயணிகள் வேன் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.