முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

திருத்தங்கலில் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:47 PM
பலி
பகிர்:

சிவகாசி அருகே திருத்தங்கலில் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்தங்கல் கே.கே. நகரைச் சோ்ந்த செபஸ்டின் மனைவி செசில்யா அம்மாள் (65). இவா் கடந்த வியாழக்கிழமை திருத்தங்கலில் சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் இவா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செசில்யா அம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிவாவை (19) கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →