வேலூர்

பைக் மோதி முதியவா் மரணம்

வேலூா் விரிஞ்சிபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் விரிஞ்சிபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

வேலூா், ராமா் பஜனை கோயில் தெரு, சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(73). இவா் ஞாயிற்றுக்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அன்பூண்டி புதிய ஊராட்சி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஜெயக்குமாா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாகனம் மோதி காவலாளி உயிரிழப்பு

தில்லியில் ஆண்டின் வெப்பமான நாளாகப் பதிவு!

ரோஷினி ஹரிபிரியன் திருமண ஆல்பம்

பாக்கெட் நாவல் : விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜாவின் புதிய படம்!

பிரான்ஸ் அதிபரை நாளை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT