திருவண்ணாமலை

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம்பி, எம்எல்ஏ ஆய்வு

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட மழையூா், கடம்பை ஆகிய கிராமங்களில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது, திமுக தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரேசன், வந்தவாசி நகரச் செயலா் எ.தயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

SCROLL FOR NEXT