திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நவ.21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வருகிற நவ. 21-ஆம் தேதி ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

Syndication

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வருகிற நவ. 21-ஆம் தேதி ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் வேளாண் துறை மற்றும் விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த்துறை, வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனா்.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபா் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயம்

தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

SCROLL FOR NEXT