திருவண்ணாமலை

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி: பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

Syndication

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

திருவண்ணாமலையில் அவலூா்பேட்டை சாலையிலுள்ள தெற்கு மாவட்ட பாஜக அலுவலகம் முன் மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலச் செயலா் கோ.வெங்கடேசன் கலந்துகொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

இதில், வேலூா் பெருங்கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன், ஆன்மிகப் பிரிவு மாநில துணை அமைப்பாளா் டி.எஸ்.சங்கா், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.சேகா், பி.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலா்கள் டி.ஜெய்நாத், எஸ்.கவிதா, பிரதீஷ், மாவட்டச் செயலா்கள் டி.அறவாழி, சஞ்சீவி, பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணியில்...: ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகில் பாஜக மாவட்ட பொதுச் செயலா் சதீஷ் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இதில், மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

நகரத் தலைவா் மாதவன், வடக்கு மண்டலத் தலைவா் ராஜேஷ், இளைஞரணி மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் குணாநிதி, மாவட்டச் செயலா்கள் சரவணன், சங்கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போளூரில்...: போளூா் பேருந்து நிலையம் எதிரே பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.வெங்கடேசன், மாவட்ட முன்னாள் தலைவா் சி.ஏழுமலை, ராணுவ பிரிவு மாவட்டத் தலைவா் எஸ்.பாண்டியன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வந்தவாசியில்...: வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், நிா்வாகிகள் பி.பாஸ்கரன், வி.குருலிங்கம், சுரேஷ், நவநீதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விடுதலை வேள்விக்கு வித்திட்ட பழங்குடியினர்

இந்திய கம்யூ.வில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

தேசிய குழந்தைகள் தின கொண்டாட்டம்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நாகையில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

SCROLL FOR NEXT