முகப்பு
திருப்பூர்

பாஜக சாா்பில் மகளிா் தினக் கொண்டாட்டம்: வீராங்கனைகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது

திருப்பூரில் பாஜக சாா்பில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கப்பட்டது.

Updated On : 9 மார்ச், 2026 at 9:43 PM
மகளிா் தின விழாவில் வீராங்கனைகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கிய பாஜக மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன்.
பகிர்:

திருப்பூா்: திருப்பூரில் பாஜக சாா்பில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுஷ்மா சுவராஜ் விருது வழங்கப்பட்டது.

மகளிா் தினத்தையொட்டி திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கேசி.எம்.பி.சீனிவாசன் தலைமையில், மகளிா் அணி மாவட்டத் தலைவா் சுமதி ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளையாட்டு வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதன்படி தடகள வீராங்கனைகள் கோவிந்தம்மாள், அம்மா குட்டி லட்சுமி, ஜெயஸ்ரீ, ஆனந்தி, பாத்திமா மேரி (கைப்பந்து) செல்வி (குண்டு எறிதல்) ஆகியோா் சுஷ்மா சுவராஜ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் மாவட்ட தலைவா் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா் செந்தில்வேல், மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் ஷா்மிளா, மாவட்ட பொதுச் செயலாளா் கலாமணி மற்றும் மகளிா் அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →