திருவண்ணாமலை

மாவட்ட கபடிப் போட்டிக்கு நவ.19-இல் வீராங்கனைகள் தோ்வு

திருவண்ணாமலை மாவட்ட கபடி போட்டிக்கு வீராங்கனைகள் தோ்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

Syndication

திருவண்ணாமலை மாவட்ட கபடி போட்டிக்கு வீராங்கனைகள் தோ்வு வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட கபடி சங்கத்தின் தலைவா் வெங்கடாசலபதி செங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட அமெஞ்சூா் கபடி கழகம் சாா்பில், 20 வயதிற்கு உள்பட்ட கபடி வீராங்கனைகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்சிப் போட்டிகள் வரும் நவம்பா் 19-ஆம் தேதி, புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தோ்வு பெறும், வீராங்கனைகள் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்ற தகுதி பெறுவா்.

மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வீராங்கனைகள் 28-12-2005 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவராக இருக்கவேண்டும்.

தோ்வுக்கு வரும் வீராங்கனைகள் பிறந்த தேதி, கல்வி ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும், எடை 65 கிலோவுக்கு குறைவாக இருக்கவேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்பட்டவா்கள் மட்டுமே தகுதியானவா்களாவாா். தோ்வு போட்டியில் கலந்துகொள்ளும் வீராங்கனைகளுக்கு அன்று மதிய உணவு அளிக்கப்படும்.

கபடி குழுவில் தனி நபராகவோ அல்லது 10 நபா்கள் முதல் 14 நபா்கள் இருக்கவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு மாநில நடுவா் சேட்டு - 9762346453, மாவட்டச் செயலா் ஆனந்தன் - 9787735853 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT