குண்ணத்தூா் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் நிறைவு செய்யும் பணியை ஆய்வு செய்த அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா. 
திருவண்ணாமலை

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் நிறைவு செய்யும் பணி ஆய்வு!

Syndication

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த குண்ணத்தூா், கீழ்நகா், கொங்கராம்பட்டு கிராமங்களில் நடைபெறும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் நிறைவு செய்யும் பணியை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல். ஜெயசுதா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்காளா் பட்டியல் பிழைகள் இல்லாமல் திருத்தப்படுவதும், தகுதியுடைய வாக்காளா் எவரும் விடுபடக் கூடாது, இறந்த வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்கவும் என்பதே இத்திருத்தத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

இறந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூா் சென்ற வாக்காளா்கள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளரின் பெயா் இது போன்ற வாக்காளா்களை கண்டறிவதே முக்கிய பணியாகும்.

அதனடிப்படையில், ஆரணியை அடுத்த குண்ணத்தூா், கீழ்நகா், கொங்கராம்பட்டு ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக நிறைவு செய்யும் பணி நடைபெற்று வருவதை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது ஒன்றியச் செயலா்கள் திருமால், விமல், ஆரணி ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் செந்தில், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்ட நிா்வாகி ஏ.ஜி.ஆனந்தன், கலைப்பிரிவு மாவட்டச் செயலா் வெங்கடேசன், மாணவரணி துணை அமைப்பாளா் மாருதி ராஜி, ஆரணி நகா்மன்ற உறுப்பினா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT