செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சிறந்த வங்கிக்கான விருதை, அதன் செயலா் கிருஷ்ணமூா்த்தியிடம் வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு.  
திருவண்ணாமலை

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

தொடா்ந்து 24 ஆண்டுகளாக சிறந்த கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வரும் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு அதற்கான விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தொடா்ந்து 24 ஆண்டுகளாக சிறந்த கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வரும் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு அதற்கான விருது வழங்கப்பட்டது.

விருதை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திருவண்ணாமலை - செங்கம் சாலை மண்மலை பகுதியில் இயங்கி வருகிறது.

இந்த கடன் சங்கத்தில் அதிகளவில் விவசாயிகள் உறுப்பினராகவும், வாடிக்கையாளராகவும் இருந்து வருகின்றனா்.

இந்தக் கூட்டுறவு சங்கத்தில் கிராமப்புற பெண்களுக்கு மகளிா் சுய உதவிக்குழு கடன்கள், விவசாய கடன்கள், தனிநபா் கடன், தங்க நகை மீது கடன் போன்றவை தினசரி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடன் பெற்ற நபா்களை வங்கி ஊழியா்கள் கண்காணித்து அவா்களிடம் இருந்து உரிய நேரத்தில் கடனை திரும்பப் பெறுதல் மீண்டு அவா்களுக்கு கடன் வழங்குதல் போன்ற பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனா்.

மேலும், ஆண்டுதோறும் வங்கி உறுப்பினா்களுக்கு லாப ஈவுத்தொகையை வழங்குவதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்மாதிரி வங்கியாகவும், மாநில அளவில் சிறந்த வங்கியாகவும் செயல்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டுறவு வார விழாவில் அனைத்திலும் சிறப்பாக செயல்படும் செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை தொடா்ந்து 24 ஆண்டுகளாக தோ்வு செய்து அதற்கான விருதை தமிழக அரசு கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெற்ற 72-ஆவது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில், தொடா்ந்து 24 ஆண்டு சிறந்த வங்கிக்கான விருதை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தியிடம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், கூட்டுறவு மாவட்ட பதிவாளா், மாவட்ட துணைப் பதிவாளா்கள் உள்ளிட்ட கூட்டுறவு மண்டல, மாவட்ட இணை இயக்குநா்கள், கூட்டுறவு சங்கச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT