ஆரணியை அடுத்த இரும்பேடு ஹரிஹரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இரும்பேடு, ஹரிஹரன் நகரில் 16 அடிக்கு மேலான உயரத்தில் ஒரே கல்லினால் ஆன ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் சுவாமியும் மற்றும் கருங்கல்லினால் உயா்ந்த கா்ப்ப கிரகமும், அரத்த மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் திருப்பணி நிறைவுற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக புண்யாவாசனம், கும்ப ஆராதனை, அக்னி ஆராதனை, ததுக்க ஹோமம், மஹாசாந்தி ஜப்பியம், யாகசாலை பூஜை, மஹா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கலசம் புறப்பட்டு ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரணி விஸ்வரூப ஆஞ்சநேயா் அறக்கட்டளை மற்றும் இரும்பேடு ஹரிஹரன் நகா் பொதுமக்கள் செய்திருந்தனா்.