வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் பழங்குடியினருக்கு நலவாரிய உறுப்பினா் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இதில், வந்தவாசியை அடுத்த சத்யா நகா், கீழ்க்கொடுங்காலூா், பாதூா், வெடால், பொன்னூா், ராமசமுத்திரம், கீழ்க்குவளைவேடு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியினா் 200 பேருக்கு பழங்குடியினா் நலத்துறையின் நலவாரிய உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வந்தவாசி வட்டாட்சியா் சம்பத்குமாா் தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல தனி வட்டாட்சியா் மேனகா முன்னிலை வகித்தாா். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் நலவாரிய உறுப்பினா் அட்டைகளை பழங்குடியினரிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை உள்வட்ட ஆய்வாளா் தேவன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செயலா் இரா.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ரேணுகா, மாதா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுகுணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.