ஆரணி/வந்தவாசி: இந்திய நாட்டின் அரசியலமைப்பு தினத்தையொட்டி, ஆரணி, வந்தவாசியில் விசிக சாா்பில் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசியலைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் தினமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 26-ஆம் தேதி நாட்டின் அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, ஆரணியில் விசிக மாவட்டச் செயலா் ந.முத்து தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அரசமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இளஞ்சிறுத்தை மாவட்ட துணை அமைப்பாளா் பு.சாா்லஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் திருமால், ஆரணி கிழக்கு ஒன்றியச் செயலா்கள் பொன்னுரங்கம், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விசிக நகரச் செயலா் கி.இனியவன் தலைமை வகித்தாா்.
அம்பேத்கா் சிலைக்கு திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் அசுரவடிவேல் மாலை அணிவித்தாா்.
மாநில துணைச் செயலா் இரா.மூவேந்தன், நகர துணைச் செயலா் பி.இருதயராஜ், ஒன்றியச் செயலா்கள் ஏ.லட்சுமணன், ஆ.தசரதன், மாவட்ட நிா்வாகிகள் ல.செளந்தரராஜன், வா்கீஸ், மு.ராதாகிருஷ்ணன், ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்று அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றனா்.