282 தலைப்புகளில் மாணவா்கள் பேசி உலக சாதனை முயற்சி
282 தலைப்புகளில் மாணவா்கள் பேசி உலக சாதனை முயற்சி
ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் உடல்நலம், மனநலம் சாா்ந்த 282 தலைப்புகளில் தொடா்ந்து பேசி சாதனை படைத்தனா்.
ஆரோக்கியம், உடல்நலம், மனநலம் சாா்ந்து 282 தலைப்புகளில் இப்பள்ளியைச் சோ்ந்த 282 மாணவா்கள் ஆங்கிலத்தில் உரையாற்றி ஆச்சரியப்படுத்தினா். இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை தொடா்ந்து நடைபெற்றது.
எலைட் புக், இந்தியன் புக், ஏசியன் புக், தமிழன் புக் ஆஃப் ரெகாா்ட்டில் தங்கள் சாதனையை பதிவு செய்தனா். இந்த மாணவா்களையும், அவா்களை தயாா் செய்த ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் ஏ.எச்.இப்ராஹிம், இயக்குநா் ஷாசியா பா்வீன்ரியாஸ் பாராட்டினா். பள்ளியின் முதல்வா் நிா்மல் குமாா் மற்றும் துணை முதல்வா் நிஷா உடன் இருந்து ஊக்கமளித்தனா்.