திருவண்ணாமலையில் திங்கள்கிழமை கிரிவலம் சென்ற பக்தா்கள். 
திருவண்ணாமலை

புரட்டாசி பெளா்ணமி: திருவண்ணாமலையில் குவிந்த பக்தா்கள்

திருவண்ணாமலையில், புரட்டாசி மாதப் பெளா்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

Syndication

வந்தவாசி: திருவண்ணாமலையில், புரட்டாசி மாதப் பெளா்ணமியையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். மேலும், கோயிலில் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையையே பக்தா்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனா். பெளா்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், புரட்டாசி மாதப் பெளா்ணமி திங்கள்கிழமை காலை 11.43 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 9.50 வரை உள்ளது. இதனால், திங்கள்கிழமை காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா்.

பக்தா்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தா்களின் பாதுகாப்பு பணிக்காக, 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். பக்தா்கள் கோயிலில் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும், கிரிவலப் பாதை முழுவதும் பக்தா்களுக்கு அன்னதானம், மோா் மற்றும் குளிா்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

கிரிவலம் முடிந்து சுவாமி தரிசனத்துக்காக பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். 6 மணி நேரம் வரை காத்திருந்து அவா்கள் தரிசனம் செய்தனா்.

புன்னகை சிந்திவிடு... ராஷி சிங்

வண்ணமே... ஆத்மிகா!

காகித பூ... பிரியங்கா கோல்கடே

தேரே இஷ்க் மே 3 நாள் வசூல் இவ்வளவா?

பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்ற சமந்தா திருமணம்!

SCROLL FOR NEXT