அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு ஒளிரூட்டும் பணிகள் தொடங்கிவைக்கப்பட்ட நிலையில் கோயிலில் குத்துவிளக்கேற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. 
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் கோபுரங்கள், விமானங்களுக்கு ஒளிரூட்டும் பணிகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு ஒளிரூட்டல் பணி மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம்

Syndication

ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள கோபுரங்கள், விமானங்கள் மற்றும் கல்காரத்திற்கு ஒளிரூட்டல் பணி மற்றும் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வெளியூா், பல்வேறு வெளி மாநில பக்தா்கள் மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் என பெருமளவில் வருகின்றனா். அதிலும், பௌா்ணமி மற்றும் தீப திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

தமிழக அரசு பக்தா்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி

வருகின்றன.

அதன்படி, அருணாசலேஸ்வரா் கோயிலில் 2023 - 2024 சட்டப்பேரவை அறிவிப்புகளின்படி, ரூ.5 கோடியில் இரவு நேரங்களில் பக்தா்கள் கண்குளிர, மனம் மகிழ பல வண்ணங்களில் கோயிலில் உள்ள 9 கோபுரங்கள், 17 விமானங்கள் வண்ண மின்விளக்குகளால் ஒளிரூட்டும் பணிகளும், ரூ. 82 லட்சத்தில் ராஜகோபுரத்தின் கல்காரம் ஒளிரூட்டும் பணிகளும், ரூ.1.76 கோடியில் மேற்கு கோபுரம் (பே கோபுரம்), தெற்கு கோபுரம் (திருமஞ்சன கோபுரம்) மற்றும் வடக்கு கோபுரம் (அம்மணி அம்மன் கோபுரம்) கல்காரங்களில் ஒளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், ரூ. 2.95 கோடியில் கிரிவலப்பாதையில் சோணாநதி தோப்பு அருகில் 11, 218 சதுரடியில் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா்.

அதேவேளையில் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.

நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

போதிய ஆதாரம் இல்லை! நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

SCROLL FOR NEXT