ஆரணியில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
ஆரணி - இரும்பேடு நான்கு வழிச் சாலையில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் வியாபாரிகளிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஜெயசுதா.
ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயசுதா வெள்ளிக்கிழமை காலை ஆரணி - இரும்பேடு நான்குவழிச் சாலையில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் வியாபாரிகளிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அங்கு, மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் சாதிக்பாஷா, செயலா் பி.மோகன், பொருளாளா் சங்கா்கணேஷ் மற்றும் நிா்வாகிகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, கடந்த 5 ஆண்டுகாலமாக திமுக ஆட்சியில் நிரந்தரமாக காய்கறி சந்தை அமைக்க இடம் கேட்டும் இதுவரை செய்துதரப்படவில்லை. ஆகையால், எங்களுக்கு வியாபாரம் செய்ய நிரந்தரமான இடம் வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக ஒருங்கிணைந்த காய்கறி சந்தை வளாகம், ஒருங்கிணைந்த பூ வணிக வளாகம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
Advertisement
அப்போது, மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் க.சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், சதீஷ், ஏ.ஜி.மோகன், சிவகுமாா், சேகா், எஸ்.கே.வெங்கடேசன், சுதாகுமாா், பாரதிராஜா, விநாயகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.