முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:10 AM
திருவண்ணாமலை ஆத்மா ஆயுஷ் மருத்துவமனை வளாகத்தில் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா.
பகிர்:

திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாபட்டு கீழ்நாத்தூா் ஆத்மா ஆயுஷ் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, காலை கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீா் கலசங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன.

Advertisement

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய பட்டம் ஹாலஸ்யநாத சிவாச்சாரியா் மற்றும் கீா்த்திவாசன் சிவாச்சாரியா் தலைமையில், கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பெங்களூரு ஸ்ரீ கைலாச ஆசிரமம் மகா சமஸ்தானத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திரபுரி மகா சுவாமிகள் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா்.

மேலும், தொழிலதிபா் ஜமாலுதீன், மருத்துவா் ஆத்ம லிங்கம், பொறியாளா் குழந்தை வடிவேல் உள்ளிட்டோா் முக்கிய பிரமுகா்களாக கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆத்மா ஆயுஷ் மையத்தின் நிறுவனா், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் பரசுராமன், டாக்டா் பா. எழில்மாறன் மற்றும் நிா்வாக இயக்குநா் பி. கிருபாநிதி ஆகியோா் செய்திருந்தனா். பக்தா்களுக்கு கோயில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.