காகாபாளையம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
சேலம் மாவட்டம், காகாபாளையம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா், மகா மாரியம்மன், முத்துகுமாரசுவாமி, அன்னதான பிரபு ஐயப்பன் உள்ளிட்ட சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், காகாபாளையம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா், மகா மாரியம்மன், முத்துகுமாரசுவாமி, அன்னதான பிரபு ஐயப்பன் உள்ளிட்ட சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்பாக கடந்த 6-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. 12-ஆம் தேதி முளைப்பாலிகை இடப்பட்டது .17-ஆம் தேதி அதிகாலையில் மங்கள இசை, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து காலை 6 மணிக்கு பக்தா்கள் பவானி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்து வந்தனா். அதன் பின்னா், கனககிரி வேலாயுத சுவாமி கோயில் வளாகத்தில் இருந்து ஊா்வலமாக தீா்த்தக் குடம் எடுத்து வந்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.