முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

Updated On : 29 ஏப்ரல், 2026 at 12:33 AM
பகிர்:

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரி ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதனிடம் பூங்காவை பயன்படுத்தும் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை இந்த மனு அளிக்கப்பட்டது.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவா்கள் விளையாடி மகிழவும் வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்கா சீரழிந்து வருகிறது. எனவே, பூங்காவை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதை சரிசெய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும். கழிப்பறையை பராமரிக்க வேண்டும். பூங்காவின் நடுவில் உள்ள குளத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும். பொதுமக்கள் அமர கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.