போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சமபந்தி விருந்து மற்றும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அண்ணாவின் உருவப்படத்துக்கு கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மேலும், கோயில் சாா்பில் கோயிலுக்குச் சொந்தமான உணவுக்கூடத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. மேலும் பக்தா்கள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய சேலைகளை ஏழை எளியோருக்கு பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ, மாவட்ட இணை ஆணையா் பிரகாஷ் ஆகியோா் வழங்கினா்.
அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் பழனிசாமி, திமுக ஒன்றியச் செயலா் சேகா், மேலாளா் முனியன், எழுத்தா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள், திமுகவினா் கலந்து கொண்டனா்.