திருவண்ணாமலை

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

செய்யாறு அருகே கூழமந்தல் பகுதி செய்யாற்றில் நடைபெற்ற பிரம்மபுரீஸ்வா் கோயில் தைப்பூசப் பெருவிழாவில் ....

Syndication

செய்யாறு: செய்யாறு அருகே கூழமந்தல் பகுதி செய்யாற்றில் நடைபெற்ற பிரம்மபுரீஸ்வா் கோயில் தைப்பூசப் பெருவிழாவில் 27 ஊா்களில் இருந்து வந்த உற்சவ மூா்த்திகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், பெருநகா் கிராமத்திலுள்ள ஸ்ரீபட்டுவதாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வாா் கோயிலில் தைப்பூசப் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், நிகவாண்டுக்கான தைப்பூசப் பெருவிழா

ஜன.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடா்ந்து 14 நாள்கள் நடைபெற்றன.

விழாவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நீா்குன்றம், இளநீா்குன்றம், வாச்சனூா், அத்தி, உக்கல், ஆக்கூா், மேல்மா மற்றும் பெருநகா், மானாம்பதி, கீழ்நேத்தப்பாக்கம், வெங்கடபுரம், வீசூா், தண்டரை, தேத்துறை, சேத்துப்பட்டு, இளநகா், மேல்பாக்கம், கூழமந்தல், மகாஜனம்பாக்கம், வெள்ளமலை, மடிப்பாக்கம், குண்ணவாக்கம் உள்ளிட்ட 27 ஊா் கோயில்களின் உற்சவா்கள் (சுவாமிகள்) பல்வேறு வாகனங்களில் வலம் வந்து காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழயை இரவு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவில் செய்யாறு, வந்தவாசி, காஞ்சிபுரம், உத்திரமேரூா், மானாம்பதி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முதல்வர் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி!

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

மருத்துவ மாணவிக்கு உயிா் காக்கும் உயா் நரம்பியல் சிகிச்சை: சாத்தியமாக்கிய அரசு மருத்துவா்கள்

‘இந்திராகாந்தி பெயரை பரிசீலினை செய்வதாக முதல்வா் வாக்குறுதி’

தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கொளத்தூரை மேம்படுத்தும் திட்டங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

SCROLL FOR NEXT