திருவண்ணாமலை

தீ விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

செய்யாறு அருகே தீ விபத்தில் வீடிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Syndication

செய்யாறு அருகே தீ விபத்தில் வீடிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லிக் கிராமம் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் வசிப்பவா் விவசாயக் கூலித் தொழிலாளி ஜெயபால்-ரமணி தம்பதியினா். இவா்களது கூரை வீடு வெள்ளிக்கிழமை மாலை விளக்குத் திரியில் இருந்து தீப்பொறி பறந்து எரிந்து சேதமடைந்தது.

தகவல் அறிந்த செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி அறிவுறுத்தலின் பேரில், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக செயலா் ஜேசிகே. சீனிவாசன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரிசி மற்றும் ரொக்கப் பணம் ரூ.2 ஆயிரத்தை நிவாரண உதவியாக வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் வழங்கக் கூடிய அரசின் நிவாரண உதவி மற்றும் வெம்பாக்கம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலக மூலம் வழங்கப்படும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க, எம்எல்ஏ மூலம் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுத்தாா்.

இந்நிகழ்ச்சியின் போது ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் எஸ்.எஸ்.கே.குமாா், கிளைச் செயலா்கள் வரதன், சரவணன், ஒன்றிய ஆதிதிராவிடா் அணி அமைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

கோயில் விழாவில் மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

பசித்துப் புசித்தால் உணவே மருந்து!

9.2.1976: நெல்லையை வாட்டும் பொல்லாத வறட்சி

நெல் சாகுபடி அதிகரிப்பை சுமையாகக் கருதுகிறது மத்திய அரசு: கேரள முதல்வா் குற்றச்சாட்டு

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் எதிரொலி: ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் குறைய வாய்ப்பு!

SCROLL FOR NEXT