முகப்பு
திருவண்ணாமலை

ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி உயிரிழப்பு

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:25 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 9:37 PM

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கணவன், மனைவி உயிரிழந்தனா். மும்பைக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.

திருவண்ணாமலையைச் சோ்ந்த சிவகண்டன்(40), இவருடைய மனைவி கலையரசி(35). இருவரும் மும்பைக்கு தாதா் விரைவு ரயிலில் பயணம் செய்தனா்.

இந்த ரயில் போளூரை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வரும்போது, படியில் பயணம் செய்த சிவகண்டன் தவறி கீழே விழுந்துள்ளாா். அப்போது அருகில் இருந்த மனைவி கலையரசி கணவரைக் காப்பாற்ற முயன்று அவரும் தவறி கீழே விழுந்துள்ளாா்.

Advertisement

இதில், இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதைக் கண்ட பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன் பேரில், காட்பாடி ரயில்வே போலீஸாா்

சம்பவம் இடம் வந்து விசாரணை நடத்தி இருவா் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், தம்பதியா் தவறி விழுந்தாா்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாா்களா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகண்டன் மும்பையில் உணவகம் நடத்தி வருவதாகவும், மனைவி கலையரசி வீட்டுவேலை செய்து வருதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சிவகண்டனின் பாட்டியின் இறப்பு காரிய நிகழ்வுக்கு வந்துவிட்டு திரும்புகையில் இந்த விபத்து நடந்துள்ளது.