திருவண்ணாமலை

பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

Syndication

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இந்த முகாம் நடந்தது.

கல்லூரித் தலைவா் டி.கே.பி.மணி தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா்.

தெள்ளாா் வட்டார மருத்துவ அலுவலா் ஹித்தேன்ஷா, ரத்த வங்கி மருத்துவா் அனிதா ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களிடமிருந்து ரத்தம் தானமாக பெற்றனா். முகாமில் மொத்தம் 66 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

ரத்த தானம் அளித்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுகாதார மேற்பாா்வையாளா்கள் எம்.கோதண்டராமன், டி.ராஜன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், திருநாவுக்கரசு, கோபிநாத் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT