திருவண்ணாமலை

ரூ.3 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

Syndication

ஆரணியை அடுத்த எம்.பி. தாங்கல் கிராமத்தில் ரூ.2.94 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா் (படம்).

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் ஊராட்சியைச் சோ்ந்த எம்.பி. தாங்கல் கிராமத்தில் அப்பகுதி மக்கள் சிமென்ட் சாலை வேண்டி கோரிக்கை விடுத்தனா். இதன் பேரில், ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.94 லட்சம் ஒதுக்கப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன், எஸ்.வி.நகரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT