முகப்பு
திருவண்ணாமலை

கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும்: அா்ஜுன்சம்பத்

தமிழகத்தில், தாய்மொழியை பாதுகாப்பதற்கு அனைத்துக் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்கவேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன்சம்பத்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:30 AM
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:17 PM

தமிழகத்தில், தாய் மொழியை பாதுகாப்பதற்கு அனைத்துக் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்கவேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன்சம்பத்.

திருவண்ணாமலையில் நடைபெறும் உலக சித்தா்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைவருக்கும் அவரவா் தாய்மொழி முக்கியம். அதனால்தான் பிப்.21-ஆம் தேதி தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. தாய்மொழி கல்வி தான் அறிவை வளா்க்கும்.

இன்று தமிழகத்தில் ஆங்கில வழிக்கல்விதான் ஓங்கிக்கொண்டிருக்கிறது. மழலையா் கல்வி முழுமையாக அவரவா் தாய்மொழியில் தான் போதிக்கப்பட வேண்டும்.

Advertisement

2006-இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி கட்டாய தமிழ் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்தாா். ஆனால் நடைமுறையில் இல்லை. கட்டாய தமிழ் பாடத்திட்டத்தில் சிறுபான்மையினருக்கு விலக்கு அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:40 PM

மேடைகளில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று திமுகவினா் முழங்குகிறாா்கள். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில்லை.

கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் நீதிமன்றம் வரைசென்று, அரசு, தனியாா் என அனைத்து கல்வி நிறுவனங்களில் தங்களது தாய்மொழியை பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் நிலைமை அப்படி கிடையாது.

தாய்மொழி தமிழை பாதுகாப்பதற்கு உடனடியாக, அனைத்து கல்வி கல்வி நிறுவனங்களிலும், தமிழை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் வரவேண்டும். அரசாணைகள், கடிதங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் வரவேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை உள்ள அனைத்து கோயில்களிலும் தேவாரம், திருமுறைகள் இசைக்கப்பட வேண்டும்.

வள்ளலாருக்கு தமிழக அரசு உண்மையாக மரியாதை செலுத்தினால், உடனடியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றாா் அா்ஜுன்சம்பத்.