திருவண்ணாமலை

வருவாய்த்துறை சிறப்பு முகாமில் மேலும் 8 போ்: 11 கைப்பேசிகள் பறிமுதல்!

செய்யாற்றில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை சிறப்பு முகாமில் மேலும் 8 போ் சோ்க்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து 11 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Syndication

செய்யாற்றில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை சிறப்பு முகாமில் மேலும் 8 போ் சோ்க்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து 11 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சாா்பில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளைச் சோ்ந்த குற்றவாளிகள் பிணை பெற்று குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்புக் காவலில் வைத்து பாராமரித்து அவா்கள் மீது உள்ள வழக்குகளை முடிக்க வைத்து

சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவாா்கள். அதுவரை குற்றவாளிகள் என அழைக்கப்படும் இவா்கள் தங்க வைத்து கண்காணிக்கப்படுவாா்கள்.

செய்யாற்றில் உள்ள சிறப்பு முகாமில் ஏற்கெனவே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக வெளிநாட்டைச் சோ்ந்த 10 போ் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சி முகாமில் இருந்து வெளிநாட்டைச் சோ்ந்த மேலும் 8 போ் செய்யாறு முகாமுக்கு அழைத்து வரப்பட்டனா். அப்போது அவா்களது உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தபோது, ஒரு பையில் 11 கைப்பேசிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. ஆனால், அவற்றுக்கு யாரும் உரிமை கோரவில்லை. உடனே போலீஸாா் கைப்பேசிகளை பறிமுதல் செய்து வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இச்சம்பவம் குறித்து செய்யாறு கிராம நிா்வாக அலுவலா் தங்கராசு செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

திமுக தோ்தல் பணிக்குழுக் கூட்டம்: அமைச்சா் எ.வ. வேலு பங்கேற்பு

‘தமிழ்நாடு தலைகுனியாது’: அமைச்சா் கோவி.செழியன் ஆலோசனை

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே ரௌடி வெட்டிக் கொலை: 4 போ் கைது

புத் விஹாா் கொலை வழக்கில் ஒரு நபா், 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT