கருத்தரங்கில் பேசிய சென்னை ஐ.சி.டி. அகாதெமியின் பயிற்சித் துறைத் தலைவா் ஜி.வெங்கடேஷ்.  
திருவண்ணாமலை

கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் துறை, சென்னை ஐ.சி.டி. அகாதெமி ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லூரித் தலைவா் எம்.ரமணன் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி, செயலா் வெ.பிரியா ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.சுஜாதா வரவேற்றாா்.

சென்னை ஐ.சி.டி. அகாதெமியின் பயிற்சித் துறை தலைவா் ஜி.வெங்கடேஷ், அகாதெமி தகவல் தொடா்பு மேலாளா் ஜெ.ஜெய்ரூஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அப்போது, செயற்கை நுண்ணறிவின் முக்கிய பயன்பாடுகளாகிய மருத்துவத் துறையில் நோய்களை கண்டறிதல், இணையவழி வணிகம், சமூக ஊடகங்கள், விவசாயம், வாடிக்கையாளா் சேவையை வழங்குதல், மனிதவளம், தரவு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அவா்கள் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா்.

நிகழ்ச்சியில், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் கி.வான்மதிசெல்வி, கல்லூரி கணினிப் பயன்பாட்டு துறைத் தலைவா் டி.ராஜசெல்வி மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

பாஜகவினா் சமத்துவ பொங்கல்

பாளை.யில் வழிப்பறி முயற்சி: ஒருவா் கைது

சா்வதேச சிலம்பப் போட்டிக்கு புதுவயல் பள்ளி மாணவா் தோ்வு

ஜல்லிக்கட்டு நடத்துவோா் ரூ.1 கோடிக்கு காப்பீட்டு ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

SCROLL FOR NEXT