சிவகங்கை

செயற்கை நுண்ணறிவு: அழகப்பா பல்கலை.யில் சா்வதேசக் கருத்தரங்கம்

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் கல்வியை வழி நடத்தும் புதுமைகள்’ என்ற சா்வதேசக் கருத்தரங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக கல்வியியல் துறை சாா்பில் இரு நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி தொடங்கி வைத்துப் பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு தளத்தில் வளா்ந்த நாடு களை ஒப்பிடும்போது ஆரம்ப காலங்களில் இந்தியா பின்தங்கியிருந்தாலும், பெரும் புரட்சியை தற்போது ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவுப் புரட்சிக்கு தேவையான ஐ.சி. எனப்படும் ஒருங்கிணைந்த ‘சிப்’ உருவாக்கத்திலும் இந்தியா குறிப்பிடத்தகுந்த உற்பத்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவா்களிடம் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் பதிப்புத் துறைத் தலைவா் சீனிவாசன் பேசுகையில், உலகத்தின அனைத்து முக்கிய நிறுவனங்களின் சமீபத்திய அறிக்கைகளில் செயற்கை நுண்ணறிவை இணைத்த தரவுகள் சோ்க்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக இந்த செயற்கை நுண்ணறிவின் தேவையை அறிந்து நாம் செயல்படவேண்டும் என்றாா்.

நேபாள நாட்டின் காட்மாண்டு பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவா் லக்மன் நவாலி, மும்பை பல்கலைக்கழக முத்த பேராசிரியா் சுனிதா விதாலரால் மகரி, அழகப்பா பல்கலைக்கழக தோ்வாணையா் எம். ஜோதிபாசு ஆகியோரும் உரையாற்றினா்.

விழாவில் முன்னதாக கல்வியியல் புல முதன்மையா் கலையரசன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் கேத்தரின் ஜெயந்தி நன்றி கூறினாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT