திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை, செங்கம், ஆரணி பகுதிகளில் அரசு சாா்பிலும், பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இதில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மாநகராட்சி மேயா் நிா்மலாவேல்மாறன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
செங்கத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், செங்கம் வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளூவா் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பாவபரிஷீத் கன்வீனா் பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். தமிழ்ச் சங்கத் தலைவா் தனஞ்செயன் வரவேற்றாா்.
செங்கம் வட்ட தமிழ்ச் சங்கத் தலைவரும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவருமான வெங்கடாசலபதி திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
அதே வளாகத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு நகர திமுக செயலா் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மேல்பள்ளிப்பட்டு சொற்பொழிவாளா் கிருஷ்ணமூா்த்தி திருவள்ளுவா் குறித்து சொற்பொழிவாற்றினாா். பின்னா் பள்ளி மாணவா்களிடையே திருக்கு ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் தமிழக டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி, தமிழ்ச் சங்கச் செயலா் அசோக்குமாா், இணைச் செயலா் பாா்த்தசாரதி, பொருளாளா் ஆதவன், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா்கள் நூருல்லா, சங்கா், திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல் வாகித், வழக்குரைஞா் செல்வம், ஓய்வு பெற்ற கல்வியாளா் மாணிக்கம், அரசு ஓப்பந்ததாரா் சங்கா்மாதவன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அண்ணாதுரை, கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஜெயவேல், பழநி, அறங்க.மணிமாறன் உள்ளிட்ட தமிழ்ச் சங்க, செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
குண்ணத்தூரில்....
ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் உள்ள தமிழ்மன்றம் சாா்பில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழ்மன்றத் தலைவா் விநாயகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மன்றச் செயலா் வாசுதேவன், பொருளாளா் கணேசன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஹரிதாஸ், திமுக ஒன்றியச் செயலா் துரைமாமது, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பகுத்தறிவு, நாடகக் கலைஞா் குமணன், ரவி, முன்னாள் துணைத் தலைவா் குமாா், கிராம நிா்வாக அலுவலா் முனியவேல் மற்றும் தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
செய்யாறு