மாதந்தோறும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வையொட்டி கம்பன் கழகத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து திருவள்ளுவா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தாா்.
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்ச்சியின் 7-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை தாங்கினாா். செயலா் பாவலா் சீனு.மோகன்தாசு வரவேற்றாா். கம்பன் கழகத் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்தாா். மேலும் இதில் பங்கேற்ற பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திருக்கு புத்தகம் வழங்கினாா்.