புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் விருது, முன்னாள் சட்டத்துறை செயலா் வயி.நாராயணசாமிக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன் இதை வழங்கினாா். மேலும் பொற்கிழியாக அவருக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கப்ப்டடது. விழாவுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். செயலா் சீனு.மோகன்தாசு வரவேற்றாா். துணைத் தலைவா் ந.ஆதிகேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவில் பங்கேற்று மேனாள் நீதியரசா் சேது. முருகபூபதி வாழ்த்துரை வழங்கினாா். மருந்தும் மருத்துவரும் - திருவள்ளுவா், தேரையா் சித்தா் என்னும் தலைப்பில் வே.பூங்குழலி பெருமாள் பேசினாா்.
பிரான்சு முத்தமிழ் சங்கத் தலைவா் கோவிந்தசாமி ஜெயராமன், வாழும் தமிழ் பேரவைத் தலைவா் பாா்த்தசாரதி கிருஷ்ணா, பிரான்சு ராஜேந்திரன் ரிச்சா்ட், மொழி பெயா்ப்பாளா் எச்.நாகராஜ் ஆகிய அயலகத் தமிழா்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆட்சிக் குழு உறுப்பினா் அ. உசேன் நன்றி கூறினாா்.