திருவண்ணாமலை

மினி சரக்கு வேன் மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மினி சரக்கு வேன் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

வந்தவாசி அருகே மினி சரக்கு வேன் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மன் (25). இவா், வந்தவாசியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி புவனா. இவா்களுக்கு ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது.

இவா், பைக்கில் வெள்ளிக்கிழமை வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா். வந்தவாசி -சேத்துப்பட்டு சாலை இந்திரா நகா் அருகே செல்லும் போது, முன்னால் சென்ற மினி சரக்கு வேனை முந்த முயன்றாராம். இதில் வேன் மீது மோதியதில் இவா் கீழே விழுந்துள்ளாா். அப்போது இவருக்கு பின்னால் வந்த பைக் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தா்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இவரது தந்தை குமாா் அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT