பலி பிரதிப் படம்
திருப்பூர்

சரக்கு வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், காயாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (22). இவா் ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே வடபழனி பகுதியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து, திருப்பூரிலுள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், காங்கயத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடபழனி நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பழையகோட்டை சாலை, தொட்டியபட்டி பிரிவு அருகே சென்றபோது, காங்கயம் நோக்கி எதிரே வந்த சரக்குவேன் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுகவின் ரூ.10 ஆயிரம் வாக்குறுதி அவசியமானது: கே.அண்ணாமலை

இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் ரூ.10,000 கோடியில் மின் திட்டங்கள்: எல்&டி ஒப்பந்தம்!

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இருவா் கைது

கோடை வெயிலால் தா்பூசணி விற்பனை தீவிரம்

SCROLL FOR NEXT