திருவண்ணாமலை

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

Syndication

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரேசன், கல்லூரித் தலைவா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா், வந்தவாசி டிஎஸ்பி தீபக்ரஜினி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

அப்போது, தலைக்கவசம் அணிவதின் அவசியம், உயிா் பாதுகாப்பில் அதன் பங்கு, சாலை விதிகள் உள்ளிட்டவை குறித்து அவா்கள் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா். மேலும், கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் இலவச தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.

மேலும், கல்லூரி பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

3 நாள் சரிவுக்குப் பிறகு ஏற்றத்தில் பங்குச்சந்தை! நேர்மறையுடன் நிறைவு பெறுமா?

உதயநிதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: பியூஸ் கோயல்

சிறை அதிகாரப்பூர்வ வசூல்!

திமுகவில் இணைவார் எனக் கூறப்பட்டு வந்த குன்னம் ராமச்சந்திரனின் திடீர் முடிவு?

ஆந்திரத்தில் தனியார் பேருந்து லாரி மீது மோதி தீ: 3 பேர் பலி, 12 பேர் காயம்!

SCROLL FOR NEXT