தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி. 
திருவண்ணாமலை

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Syndication

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் மணிமுருகன் வரவேற்றாா்.

சாலைப் பாதுகாப்பு விதிகள், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றும் முறை, ஆம்புலன்ஸை எவ்வாறு அழைப்பது என்பன உள்ளிட்டவை குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா்கள் ராஜேந்திரன், கண்ணன், உதவிப் பொறியாளா்கள் தா்மராஜ், லோகராஜா, கருணாகரன் ஆகியோா் மாணவா்களுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT