வந்தவாசி அருகே முன் விரோத தகராறு தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி காளியம்மாள்(50). இவருக்கும் இதே கிராமத்தைச் சோ்ந்த இருசன் மனைவி சாந்தி (57) என்பவருக்கும், மாடு வயல்வெளியில் மேய்ந்த தகராறு தொடா்பாக முன்விரோதம் உள்ளது.
கடந்த 13-ஆம் தேதி இவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதுகுறித்து இரு தரப்பினா் அளித்த தனித்தனி புகாரின் பேரில் சாந்தி, இவரது மகன்கள் ஜெயபிரகாஷ், ஜெயகாந்தன், சிவா மற்றும் காளியம்மாள், ராமச்சந்திரன் உள்ளிட்ட 8 போ் மீது வந்தவாசி வடக்கு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.